Tuesday, 15 March 2016

எலுமிச்சை சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: (ஒரு நபருக்கு)
எலுமிச்சை: பெரியது அரை காய்
பூண்டு: 5 சிறிதாக நறுக்கியது
இஞ்சி: சிறு நெல்லிக்காய் அளவு-நறுக்கியது
வர மிளகாய்: 2
மஞ்சள் மற்றும் பெருங்காயம்: சிறிதளவு
எண்ணை, கறுவேப்ளை, கடுகு உளுந்து தாளிப்பதற்கு



செய்முறை:

முதலில் அரிசியை குக்கரில் வைத்து சாதம் செய்து கொள்ளவும். எழுமிச்சை சாறு பிழிந்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, உழுந்தம்பருப்பு, கருவேப்பிள்ளை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய பூண்டு, இஞ்சியை சேர்த்து வதக்கவும். பிறகு பிழிந்த எழுமிச்சை சாறை ஊற்றி மஞ்சள் & பெருங்காயம் சிறிது மற்றும் தேவையான அளவு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி விடவும்.

இப்பொழுது எழுமிச்சை கரைசலை சாதத்தில் கலக்கினால் எழுமிச்சை சாதம் தயார். மேலே நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி பரிமாரலாம்.

posted from Bloggeroid

No comments:

Post a Comment