Tuesday, 15 March 2016

லேசா பொறாமைப் படலாம் வாங்க!


வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு வெட்டியாகபதிவு எழுதுபவரா நீங்கள்? வாங்க இவங்களை பாத்து கொஞ்சம் பொறாமைப் படலாம்.
கூகிள்பதிவு எழுதுபவர்கள் சம்பாதிப்பதற்கு ஆட்சென்ஸ் வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட வலைப்பூக்களுக்குகூகிள் விளம்பரங்களை வழங்குகிறது. அதன் மூலம் கணிசமான வருமானம் பெறுபவர்கள்உண்டு. ஆனால் தமிழில் எழுதுபவர்களுக்கு இந்த விளம்பரங்களை கூகிள்தருவதில்லை. தமிழில் எழுதுபவர் சிலரும் எப்படியோ கூகிள் ஆட்சென்ஸ் மூலம்விளம்பரம் பெறுவதை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு எந்தஅளவுக்கு வருமானம்கிடைக்கறது என்று தெரியவில்லை
சமீபத்தில்ஆட்சென்ஸ்மூலம் அதிகமாக சம்பாதிக்கும்முதல் 10 இந்திய பதிவர்களைப்பற்றி அறிய நேர்ந்ததது.இதோ அந்த விவரம்.இவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்எழுதுபவர்கள்
பெருமூச்சு விட்டுட்டும் படிக்கலாம் படிச்சிட்டும் பெருமூச்சு விடலாம்.

முதல் இடத்தில் இருப்பவர்அமீத் அகர்வால்.இவரது வலைப பூவின் பெயர்digital insipration; வலைபூ முகவரிwww.lebnol.org. I.I.T இல படித்த பொறியியல் பட்டதாரியான கணினி தொழில் நுட்பப் பற்றி எழுதிவரும் இவர்இந்தியாவின்முதல் முழுநேர தொழில்முறைப் பதிவராம்.இவரது சராசரி வருமானம் $40000. வருடத்திற்கு அல்ல மாதத்திற்கு.




2 வது இடம்அமித்பவானிamitbhawani tech blog என்ற வலைபூ இவருடையது. வலைபூ முகவரிamitbhawani.com/blog கணினி தொழில்நுட்பம், பற்றியே எழுதுகிறார். இவரது வருமானம் $20000..இவரது வலைப் பூ எளிமையானவடி வமைப்பில் உள்ளது.


3. Shout Me Loud என்ற வலைப்பூவின் உரிமையாளர் ஹர்ஷ் அகர்வால் .ஒரு மென்பொருள் பொறியாளர் .முன்னணி கணினி தொழில் நுட்ப நிறுவனமானஅக்செஞ்சர் நிறுவனத்தில் கிடைத்த வேலையை ஒதுக்கி விட்டு முழு நேர வலைப் பூஎழுதுபவராக மாறினார்.அவர் குடும்பத்தினர் இதை எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லையாம்..இன்று மாதம் 15000$ வருமானம் ஈட்டுகிறார். முகவரி http://www.shoutmeloud.com/


4.மாதம் 11000$ ஈட்டும்ஜஸ்பால் சிங்http://savedelete.com/என்ற ப்ளாக் நடத்துகிறார். பெயருக்கேற்ற வகையில் கணினி குறிப்புகள் இவரதுவலைப்பூவில் நிறைந்து காணப்படுகிறது.இவரும் மற்றவர்களைப் போலவே பொறியியல்பட்டதாரிதான். ஆனால் மெக்கானிக்கல் படித்தவர்.கணினியின் மீது தீராதகாதல்கொண்ட இவர் தூங்குபோது கூட மடிக் கணினி யுடன்தான் தூங்குவாராம்
5. கணினி அல்லாத துறையில் எழுதுபவர்களில்முன்னணியில் இருக்கும் பிளாக்கர்அருண் பிரசாத் தேசாய். பிசினஸ், மார்கெட்டிங் ட்ரெண்ட் பற்றிய செய்திகள் இவரதுtrak.inவலைப்பூவில் அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றன .இவரது மாத வருமானம் 10000$ களாம். IT பொறியாளராக இருந்த போதும் பிசினஸ் தான் இவரை கவர்ந்திருக்கிறது.
6. நிர்மல் பாலச்சந்திரன்: கணினி செல்போன் நுட்பங்கள்பற்றி எழுதிமுன்னிலையில் இருக்கும்பதிவர் கொச்சியை சேர்ந்த இவர் சிவில்இஞ்சினியர்.முன்னணி ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிய இவர்அதனை துறந்து 24 மணி நேர வலைப பதிவர் ஆனார்.இவரது வலைபூhttp://www.nirmaltv.com. நிர்மல் டிவி.காம் இன் மாத வருமானம் 9000$
7. blogsolute.com ஐ தொடங்கி கணினி தொடர்பான செய்திகளை எழுதி வரும்ரோஹித் லாங்டேஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் .இவர் ஈட்டும் டாலர் வருமானம் 8500.கணினிசிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் இவர் இணையம் கணினி தொடர்பான சொற்பொழிவுகளும்ஆற்றுகிராரம் .

8. ராகுல் பன்சால்:இவரது வலைபூ Devil Workshop. கணினி கைபேசி சார்ந்தே இவரது பதிவுகளும் அமைந்திருக்கின்றன . இவரது பொருளீட்டல் மாதந்தோறும் 7000 $.
9. இன்னும் ஒரு முன்னணி கணினி, வலைபதிவுகள்சார்ந்து வலைபதிவர்ஹனிசிங்.இவரது வலைப்திவின் பெயர்Honeytechblog.com. வருமானம் 6000$ மாதந்தோறும் அட்சென்ஸ் மூலமாக சம்பாதித்து வருகிறார்
.
10. இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளதமிழ்நாட்டை சேர்ந்தஸ்ரீனிவாசின் வலைபூ 9lessons. முகவரி http://www.9lessons.info/. கணினிமொழிகள் நிரல்கள், தொடர்பாகவே எழுதும் இவரது வருவாய் மாதம் 5000$ . சென்னையில் வசிக்கும் இவர் DR. MGR பல்கலைக் கழகத்தில் படித்தமென்பொறியாளர்
இவர்களைத் தவிர முன்னிலையில் இருக்கும் இன்னும் பலரும் உண்டு.
இவர்களைப் பற்றியவிவரங்களில் இருந்து சில விஷயங்களை புரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் கணினிதொடர்பான தகவல்களைஆலோசனைகளை பற்றி எழுதுபவர்கள் தான் பிளாக்கில்கொடிகட்டிப் பறக்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் எழுதினால் மட்டுமே உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற முடியும் என்ற நிலையே தற்போது உள்ளது. இந்த நிலை ஒருநாள் மாறக் கூடும்
இவர்கள் யாரும் ஒரே நாளில் இந்த நிலையை அடைந்து விடவில்லை. Adsense மூலம் வருமானம் ஈட்டுவதற்கு கடின உழைப்பும் உடனடி மேம்படுத்திக் கொள்ளுதலும் அவசியம் என்பதை இவர்களது பதிவுகள் உணர்த்துகின்றன.
கூகுளின் adsense அங்கீகாரம் பெற்ற மொழிகளில் தமிழ் இல்லை. இந்தி மொழிக்கும் Adsense அப்ரூவல் கிடைக்கவில்லை. இணையத் தொடர்பான முன்னேற்றம் இந்தியாவில் இன்னும் வளர வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.
அதீதமான நம்பிக்கையும் உள்ளார்ந்த ஈடுபாடும், திட்டமிட்ட செயல்பாடும் ஆழ்ந்த அறிவும் உடையவர்கள் எப்போதுமே வெற்றி பெறுகிறார்கள்.
நன்றி : தமிழ் கம்ப்யூட்டர் இதழ் மற்றும் பல்வேறு இணைய தளங்கள்

posted from Bloggeroid

No comments:

Post a Comment